Tuesday, April 26, 2011

எனக்கு ஆசை....

என்னை ஒரு நொடியாவது நீ
  பார்க்கவேண்டுமென எனக்கு ஆசை....
அனால் நீயோ அதற்க்கு மறுக்கிறாய்...  
கனவிலாவது வந்து பார்ப்பேன்
  என்று உறுதி கொடு எனக்கு...
உனக்காக உறங்கிக்கொண்டிருபேன் 
  என் வாழ்கை முழுவதும்.....

அன்று மலர்ந்த பூக்கள்...

உன் பார்வையிலே அன்று மலர்ந்த பூக்கள்...
உன் பார்வை கண்டதும் பட்டு போகிறதே...
நீ என்னுடன் இல்லாத காரணம் 
அந்த பூக்களுக்கும் தெரிந்து விட்டதோ???? 

என் நிழல் .....

என் நிழலை பார்த்தாலே 
எனக்கு கோபம் கோபமாய் இருக்கிறது....
பிரிந்து சென்ற உன்னை  நினைத்து ...
நீ தான் என திரும்பி திரும்பி பார்கிறேன் ...
ஒவ்வொரு நாளும்....  

புரிந்து கொண்டேன்

உன்  புன்னகையில்  புரிந்து  கொண்டேன் 
"என்  காதலை "
உன்  பிரிவில்  புரிந்து  கொண்டேன் 
"என்  வாழ்கையை "

இமை மூடாமல் ............

என் இமை மூடாமல் 
உன்னை பார்க்க வேண்டுமென...
ஆசைப் பட்ட என் இரு வழிகள் 
இறக்கும் நேரத்திலும் கூட
இமை மூடாமல் உன்னை 
நினைத்துக்கொண்டே......  

உண்மையான காதல்.....

நீ என் இதய துடிப்பை
 என்று புரிந்து கொள்கிறாயோ....
அன்றே நான் உன் மீது 
கொண்ட உண்மையான காதல்.....
உன்னில் வெளிப்படும்.... 
 

பிரிவு..

உனக்காகவே வாழும் நான்....
உனக்காகவே  துடிக்கும் என் இதயம்....
என் உயிரின் இறுதி கண்ணீர் கூட
உனக்காகவே சிந்தும் என் இரு விழிகள்....
இவை அனைத்தும் உனக்காகவே இருந்தும்..
நீ ஏன் என்னை விட்டு  பிரிந்து சென்றாய்....

என்னை சோகத்தில் விட்டு விட்டு..

நீ எனக்குள்ளே வரும் பொது 
ஆனந்தமாய் இருந்த நான் ....
நீ என்னை விட்டு பிரியும் பொது  
பிரிவை தாங்கும் மனம் இல்லை...
என்னை சோகத்தில் விட்டு விட்டு..
நீ மட்டும் எப்படி சந்தோஷமாக?????

ஆறுதல் ...

உன்னை நினைத்து 
   உனக்காக காத்துக் 
கொண்டிருக்கும்
   என் இதயத்திற்கு..
ஆறுதல் என்னவென்று 
  உனக்கு தெரியுமா?
எனக்குள்ளே இருக்கும் 
  உன் அன்பான 
நினைவுகள் மட்டுமே.......     
 

பார்த்த முதல் நாள் ..

நீ என்னை பார்த்த 
முதல் நாள் ..
அதில் எனக்கு உன்மீது
உருவான காதல்...
விண்ணும் , மண்ணும் 
இருக்கும் வரை..
என்னில் என்றுமே 
நிலைத்திருக்கும்....     
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.