Saturday, May 14, 2011

புரியும் காதல்..

இப்போது புரிகிரதா 
என் காதல்....
எவ்வளவு ஆழமாக 
உன்னை நேசித்தேன்....
வ்வளவு உண்மையாக
நீ இருந்தாய்....
தோல்வி இன்று நமக்கு
வந்து விட்டதே...
அது உன் தவறா????
என் தவறா??
என் தவறாக இருந்தால் 
நான் கவிதை எழுத மாட்டேன்...
நிச்சயம் உன் தவறு தான்...
நமது பிரிவை நினைத்து 
ஒரு நாளாவது வருந்துவாய்......  
  

பிரிந்து சென்றால் ...

நினைத்தபடி வாழ்கை 
அமையவில்லை என்றால்...
சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்...
நினைத்தபடி காதல் அமைந்த பின் 
சில நாட்கள் வாழ்ந்து பிரிந்து சென்றால் 
எப்படி மாற்றிக்கொள்வது....
மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் 
முடியாமல் நான் தவிக்கிறேனே... ....    

எதற்க்காக நீ

எதற்க்காக நீ 
கஷ்டப்பட்டு உன் முகத்திற்கு
அழகு சேர்க்கிறாய்????
சிறிது நேரம் கண்ணாடி முன்னாடி 
நின்றாலே போதுமே....    

பேசமுடியாமல் தவிக்கிறதே.....

எந்த தயக்கமும் இன்றி 
கலகலப்பாக..
அனைவரிடமும் பேசும் 
என் உதடுகள் ...
உன்னிடம் பேசுவதற்கு 
மட்டும்
சிறு குழந்தை போல 
தினமும் பேசமுடியாமல்  
தவிக்கிறதே.....     

மறக்க சொல்கிறாய்...

நீ என்னை மறக்க 
சொல்கிறாய்...
மறக்க முடியாமல் 
தவிக்கிறேன்...
நீ என்னில் வந்த நாளே 
என்னில் கலந்து விட்டாய்...
என் உயிர் பிரியும் வரை 
என்னுடன் இருப்பாய்....
உயிர் பிரிந்த பின்பும்
நீ என்னுளே தன இருப்பாய்....          

நீ என்னுடன்....

நீ இருக்கும் வரை
நான் வாழ்வேன்...
நீ என்னுடன் என்னருகே
இல்லை என்றாலும்...
நாம் வீனளித்த இனிமையான
நேரத் துளிகள் ....
என்றுமே மறக்க மாட்டேன்
என்னில் உயிர் இருக்கும் வரை..      

காயம்...

உன்னை தொட நினைத்தேன்
என் இதயத்தை கொண்டு....
தொட்ட இதயத்தை காயம்
செய்து விட்டு சென்றுவிட்டாய் நீ.. 

முதல் பார்வை....

முதல் பார்வைலே
முகவரி தந்தாய்....
இருவரும் ஒன்று சேர்ந்து
என்றுமே இருப்போமா??
சேர்ந்து இருந்த நிமிடங்களை
நான் மறப்பேனோ....
மறந்தாலும் உன் நினைவு
மறக்க விடாதே...    

கண்....

நான் இரவில் தூங்கும்
நேரத்திலும் கூட ...
தூக்கம் வரவில்லையே  
அது உன்னால்தானே...
உன்னை பார்த்த என்
இரு கண்களுக்கும்...
பார்த்த நாள் முதல்
கண்களை மூட
இன்றும் மனமில்லையே...  
உன்னில் அப்படி என்ன
இருக்கிறது ..???   ...

Azhaku....

உன்னை அழகை பார்த்து 
வெறுப்பில்....
பொறாமை பட்ட
மலர்களும்...
சூரிய வெப்பத்தில்
கருகிவிட்டதே....
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.