நடக்கும் குழந்தையாய்
இருப்பதை விட...
தவழும் குழந்தையாய்
இருக்க ஆசைபடுகிறேன்....
தவழும் வயதில் நான்
நடக்க ஆசை பட்டேனே....
முயற்சி திருவினை ஆகும்
என்ற நம்பிக்கிலே....
பசிக்கும் நேரத்திலும்
சொல்ல தெரியாமல் ...
என்னை பெற்ற தாயை
பார்த்து அழுதேனே..
நான் பசியில் தான்
அழுகிறேன் என்று..
தாய்க்கு புரிந்திருக்கும்
என்ற நம்பிகைலே....
சிரிக்கவும் தெரியாமல்
சிரிக்க வைக்கவும் தெரியாமல்..
தவிக்கும் ஓர் உன்னதமான
பருவம் இது...
அழ தெரிந்த எனக்கு
மனதார யாருமே...
அழ வைக்கவும் தெரியாத
ஆனந்தமான வயதிலே..
கடுகளவும் கவலை இன்றி
வாழ்கிறேனே..
எபோது ஆரம்பம் ஆகும்
சோகம் எனக்கு....
சோகம் இல்லாமல் நான்
வாழ வேண்டுமென...
அனைவரிடமும் சிரித்து
பழகுகிறேனே...
அது என் வாழ்வில் தொடருமா
ஆயுள் முடியும் வரை...
இல்லை தொடராமல்
போகுமா????
சோகம் இருந்தாலும்
மறைத்து....
உங்களுக்கு நான் தருவது
சந்தோஷம் தான்...
உங்கள் அன்பு பிள்ளை
கவி பால்ராஜ்....
இன்றும்... என்றும்...
என்றென்றும் நான்...
0 comments:
Post a Comment
Send your comments: